இரு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து - நால்வர் மரணம்
[2023-05-02 14:51:22] Views:[428] வடகிழக்கு ஸ்பெயினில் பார்சிலோனா நகரின் வடக்கே அமைந்துள்ள மோயா நகர விமான நிலையத்தின் அருகே இரு இலகுரக விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில்
நால்வர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
நேரில் கண்ட ஒருவர் வழங்கிய தகவல்களுக்கு அமையவே மீட்பு பணியாளர்களினால் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
இதில் ஒரு விமானம் விமான நிலையத்தின் அருகே மரங்கள் நிறைந்த பகுதியில் விழுந்து தீப்பற்றியதாகவும் விமானத்தில் பயணித்த இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பின்னர் நீண்ட தேடுதல் பணிக்கு பிறகு இரண்டாவது விமானத்தை கண்டுபிடித்ததுடன் அதில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
நடுவானில் இரண்டு விமானங்களும் மோதிக் கொண்டதலே இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.