6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
[2023-06-01 11:39:20] Views:[358] நியூஸிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் வசிக்காத ஆக்லாந்து தீவுகளுக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
33 KM ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நியூஸிலாந்தின் பூகம்ப கண்காணிப்பு முகவரகம் தெரிவித்துள்ளது
இப்பூகம்பத்தின் அதிர்வு உணரப்பட்டதாகவோ, சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாகவோ இல்லை என அந்த நாட்டு வானிலை திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.