நிலச்சரிவில் சிக்கி 42 பேர் உயிரிழப்பு
[2023-06-07 11:58:05] Views:[380] ஹெய்டியில் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் 42 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 11 பேரை காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்விபத்தில் 37 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்
13,400 பேர் தங்களது இருப்பிடங்களை விட்டு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர் என்றும் பலருக்கும் உணவு குடிநீர் மற்றும் மருந்து உள்ளிட்ட பொருட்கள் அவசர தேவையாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.