படகு கவிழ்ந்து 103 பேர் மரணம்!
[2023-06-15 12:09:23] Views:[784] நைஜீரியா நாட்டின் வடக்கு நைஜர் எனும் மாகாணத்தில் படகு கவிழ்ந்ததில் சிறுவர்கள் உள்ளிட்ட 103 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நைஜர் மாகாணத்தில் உள்ள கிராமமொன்றில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பலர் இதில் பங்கேற்ற தன் பின்னர் 300 க்கும் மேற்பட்டோர் ஒரு படகில் அதிகாலை 3 மணியளவில் திரும்பிக் கொண்டிருந்த போது அதிக எடை காரணமாக படகு திடிரென ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதாகவும் இவ்விபத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட 103 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் தெரிய வருகிறது.