கைபேசியை குளியலறையில் உபயோகித்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!
[2023-07-01 11:41:41] Views:[479] பிரான்ஸ் நாட்டின் மார்சேயின் எனும் நகரப்பகுதியில் குளியலறையில் தொலைபேசி உபயோகித்த 16 வயதுடைய சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குளியலறைத் தொட்டியில் குறித்த சிறுவன் குளித்துக் கொண்டிருக்கும் போது அருகில் மின்னேறிக் கொண்டிருந்த தொலைபேசியை எடுப்பதற்கு முயற்சி செய்துள்ளதாகவும் அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதால் குறித்த சிறுவன் சுய நினைவிழந்து கீழே விழுந்ததையடுத்து விரைந்து செயற்பட்ட சிறுவனின் தயார் மருத்துவக் குழுவினரை அழைத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
அங்கு விரைந்து வந்த மருத்துவக் குழுவினர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் இருப்பினும் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.