மீண்டுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்
[2023-07-02 15:19:18] Views:[594] நேற்றையதினம் (01) இந்தோனேசியாவின் யோகியாகா்த்தா மாகாணம், பான்டுல் என்ற கிராமத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதுடன் அந்த நிலநடுக்கத்தால் 67 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.
நிலநடுக்கத்தால் அச்சமடைந்த பொதுமக்கள், கட்டடங்களில் இருந்து திறந்தவெளியை நோக்கி ஓடியுள்ளதுடன் சுமாா் 93 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அயல் பிரதேசங்களுக்கும் இதன் பாதிப்பு உணரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.