ஆடை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 16 பேர் உயிரிழப்பு
[2023-09-02 12:00:36] Views:[373] பயங்கர தீ விபத்து ஒன்று பிலிப்பைன்ஸில் உள்ள ஆடை தொழிற்சாலையில் தங்குமிடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்த கட்டடத்தில் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தீ விபத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுடன் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் எனவும் அஞ்சப்படுகிறது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.