களிமண் பானையில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மையா!
[2023-09-03 10:32:14] Views:[484] குளிர்ந்த நீரை அருந்த பலரும் குளிர்சாதன பெட்டியை பயன்படுத்துகிறோம். ஆனால் கனிமச் சத்துகள் நிறைந்த பானை நீர் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.
மண்பானையில் குடிநீரை ஊற்றி வைத்து 2-5 மணி நேரம் வைத்திருந்தால் அத் தண்ணீரில் உள்ள மாசுப் பொருள்கள் பலவற்றையும் மண்பானை உறிஞ்சிவிடும்
பிளாஸ்டிக்பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடிப்பதைவிட களிமண் பானையில் தண்ணீர் வைத்து குடித்தால் உடல் நலத்திற்கு ஆரோக்கியம் உண்டாகும். மேலும் மண்பானையில் வைக்கப்படும் தண்ணீரை குடிப்பது தொண்டைக்கு மென்மையாகவும் இதமாகவும் இருக்கும்.