விஞ்ஞானிகள் கண்டுபிடித்த பூமியை போன்ற புதிய கிரகம்
[2023-09-17 11:50:53] Views:[418] சூரிய குடும்பத்தில் 8 கோள்கள் உள்ளன.
இதில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன.
பூமியை போன்று உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற கிரகத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சூழலில் நெப்டியூன் கோளை தாண்டி பூமியை போன்ற புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக கூறப்படுறது.
நெப்டியூன் கோளுக்கு அடுத்துள்ள பகுதி கைப்பர்பட்டை என்று அழைக்கப்ப டுகிறது இது பனிப்பொருடகளை கொண்ட பகுதி ஆகும் இங்குள்ள குறுங்கோள்கள் மீத்தேன்,தண்ணீர். அமோனி யாவைக் கொண்டுள்ளதாகவும் இந்த கைப்பர் பட்டைபகுதியில் பூமி போன்ற கிரகம் இருக்கிறதாகவும் இது எங்களது கணிப்பு மட்டுமே இதுதொடர்பாக மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம் சூரிய குடும்பத்தில் 9 வது கிரகம் மறைந்திருக்கிறது அந்த கிரகத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் நீண்ட காலமாக கூறி வருகின்றனர் நாங்கள் கண்டுபிடித்திருப்பது சர்வதேச விஞ்ஞானிகள் கூறி வரும் 9வது கிரகம் கிடையாது
இது வேறு ஒரு புதிய கிரகம் என்று கருதுகிறோம் என மேலும் சில விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சூரிய குடும்பத்தின் எல்லையில் இந்த கிரகம் இருப்பதாகவும் அது சூரியனில் இருந்து பூமி, 94 வானியல் அலகு தொலைவிலும் சூரியனில் இருந்து புதிய கிரகம் சுமார் 200 வானியல் அலகு தொலைவிலும் இருப்பதாகவும் இந்த கிரகம் பற்றிய ஆய்வுகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.