தென் ஆப்பிரிக்கா அணியை நெதர்லாந்து 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
[2023-10-18 07:02:11] Views:[505] 2023 -ஐசிசி உலக கிண்ணப் தொடரின் லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை நெதர்லாந்து 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது வெற்றியை பதிவுசெய்துள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 43 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 245 ஓட்டங்களை பெற்றது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி 246 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.தென் ஆப்பிரிக்க அணி 42.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 207 ஓட்டங்கை மட்டுமே பெற்றது.