yarlathirady.com

அரசியலாக்கப்படும் மாவீரர் தின நிகழ்வுகள்!

[2023-11-16 10:46:00] Views:[428]

சமகாலத்தில் மாவீரர் தின அனுஷ்டிப்புக்கான முன் ஆயத்த நிகழ்வுகள் பல இடங்களில் முன்னெடுக்கப்பபட்டு வருகின்றன. உண்மையில் இம்மாவீரர் தின நிகழ்வுகள் யாருக்காக? எதற்காக? மாவீரர் தின நிகழ்வுகளை நிச்சயம் அனுஷ்டித்தே ஆகவேண்டும் என ஒற்றைக்காலில் நிற்பவர்கள் யார்?


இதன் பின்னணியில் இருப்பவர்கள் அரசியல்வாதிகளே.. ஆனால் இவ்வரசியல்வாதிகள் ஈழப்போர் இடம்பெற்றபோது எங்கிருந்தார்கள் ? இவர்கள் நினைத்திருந்தால் அப்போது ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தையோ தொடர் போராட்டத்தையோ முன்னெடுத்து யுத்தத்தை நிறுத்த முயற்சி எடுத்திருக்கலாமே ? ஏன் அன்று செய்யவில்லை.ஆனால் இப்போது மட்டும் அவர்களின் அரசியல் நாடகங்களுக்காக இதனை முன்னெடுக்கின்றனர். தற்போது அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரைச் சொல்லி மக்கள் மத்தியில் தனது செல்வாக்கினை அதிகரித்துக் கொள்ளவே இவ்வாறான நிகழ்வுகளை மேற்கொள்கின்றனர்.


எனது நோக்கம் மாவீரர் தின நிகழ்வுகளை அனுஷ்டிக்க வேண்டாம் என்பதல்ல . யதார்த்தத்தையும் உண்மைத்தன்மையும் மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற முயற்சியே ஆகும்.


உண்மையில் சிந்தித்துப் பாருங்கள் மாவீரர் தினத்தை தற்போது நினைவு கூறுவதால் இனி நடக்கப் போவது என்ன ? கடந்த காலத்தை மாற்றியமைக்க இனி எவராலும் முடியாது. இனிவரும் சந்ததியினராவது இந்நாட்டில் சந்தோஷமாக வாழ வேண்டும் அவர்கள் மனதிலும் கடந்த கால கசப்பான சம்பவங்களை கூறி அவர்களையும் மீண்டும் ஒரு இருண்ட யுகம் நோக்கி தள்ளப் போகிறீர்களா? கடந்த காலத்தில் இடம்பெற்ற அனைத்தையும் மறந்து அனைவரும் ஒற்றுமையாக வாழ வழி செய்ய வேண்டும். அதைவிடுத்து மீண்டும் இவற்றை இப்போது உள்ள சந்ததியினருக்கு கூறும் பொழுது அது மீண்டும் ஆறாத ரணமாக அவர்கள் மனதில் பதியும் அல்லவா?


உண்மையில் அம்மாவீரர்களுக்கு நீங்கள் நன்றி கூறுவதாக இருந்தால் மாவீரர் தின ஊர்வலங்களுக்கும் பேரணிகளுக்கும் பதாதைகளுக்கும் செலவு செய்யும் தொகையை போரில் கலந்து கொண்டு உயிர் நீத்த மற்றும் கை கால்களை இழந்த முன்னாள் போராளிகளுக்கும் போராளிகளின் குடும்பங்களுக்கும் கொடுத்து உதவுங்கள். முன்னாள் போராளிகள் வாழ்கின்ற பின் தங்கிய கிராமங்களை தத்தெடுத்து அக்கிரமங்களின் அபிவிருத்திக்கு என்ன சரி செய்து கொடுங்கள். நம்மவர்கள் கற்பித்தவைகளை மனதில் கொண்டு இனிவரும் சந்ததியினருக்கு இனிய நாட்டை பரிசளியுங்கள்.


மாவீரர்களின் பெயரைச் சொல்லி சமூக சேவைகளை முன்னெடுக்கலாம். முன்னாள் போராளிகள் பலர் இன்று பொருளாதார ரீதியாக கஷ்டத்தில் உள்ளனர் .அவர்களுக்கு உதவலாம். பதாதைகளுக்கும் பேரணிகளுக்கும் செலவழிக்கும் பணத்தை முன்னாள் போராளிகளின் நலன் பாதுகாப்புக்கு செலவழிக்கலாம் இதுவே உண்மையாக அவர்களின் புனித பணிக்கு நாம் செய்யும் நன்றியாகும்.


இந்த உலகில் அனைத்து நாடுகளுமே யுத்தத்திற்கு முகம் கொடுத்தே வந்துள்ளன. அதேபோன்று நாமும் முகம் கொடுத்துள்ளோம் .யுத்தம் மௌனித்து 14 வருடங்களாகி விட்டன .இவ்வாறான ஒரு சில தினங்களை பயன்படுத்தி அரசியலாபம் தேட முயற்சிக்கும் அரசியல்வாதிகளை இனங்கண்டு கொள்ளுங்கள். தற்போது இதன் உண்மை தன்மையை விளங்கிக் கொண்டு சரியாக கையாண்டால் எதிர்காலத்தில் இவ்வாறானதொரு நிகழ்வை அரசியலுக்காக பயன்படுத்துவதை தடுக்கலாம்.


இவர்களின் அரசியல் இலாபங்களுக்காக இத்தகைய நிகழ்வுகளை அரசியலாக முன்னெடுத்து இனிவரும் சந்ததியினர் மத்தியிலும் இனவாதத்தை விதைக்க முயற்சிக்கின்றனர். மக்களிடையே இனவாதமும் ஒற்றுமையின்மையும் காணப்படும் வரையிலேயே இவர்களின் அரசியல் நிலைத்திருக்கும் .இதனாலேயே இவர்கள் இவ்வாறான நிகழ்வுகளை அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். இதற்கு ஒருபோதும் இடம் தராதீர்கள்.


சினிமாசெய்திகள்
குட் பேட் அக்லி
2025-04-10 19:52:04
சிறந்து விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அடுத்த பைனலிஸ்ட் இவர் தானா - சரிகமப சீசன் 4
2025-04-09 11:41:31
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள திவினேஷ் தான் 4 வது இறுதி போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஹ்மான் இசையில் ராம் சரண் நடிப்பில் பெத்தி படம்...
2025-04-06 15:12:52
புச்சி பாபு இயக்க இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள்.
நடிகர் அஜித் வாங்கிய சம்பளம்
2025-04-06 14:59:21
குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடிக்க அஜித் ரூ. 163 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாஸ் லுக்கில் அஜித் - குட் பேட் அக்லி
2025-04-04 12:13:24
இப்படத்தின் டீசர் சென்ற மாதம் வெளிவந்து பட்டையை கிளப்பியது.
பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார்..!
2025-03-26 09:18:24
பாரதி ராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான 48 வயதான மனோஜ் பாரதிராஜா இதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வில் இருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.