yarlathirady.com

ஒரு தலை காதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை படுகொலை!

[2023-11-17 09:50:28] Views:[538]

இந்தியாவில் உள்ள கர்நாடகா மாநிலத்தில் காதல் விவகாரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை படுகொலை செய்த ஏர் இந்தியா ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் கர்நாடாகா மாநிலத்தில் பெலகாவி மாவட்டம், குடாச்சியைச் சேர்ந்தவர் 46 வயதான ஹசீனா மற்றும் அஃப்னான் (23 வயது), அய்னாஸ் (23 வயது), அசெம் (12 வயது) என்ற அவரது குழந்தைகளே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஹசீனாவின் கணவர் துபாயில் பணிபுரிந்து வருவதால் தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் உறவினர் ஹாஜிரா (வயது 70) என்பவருடன் குடாச்சியில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2023.11.12 ஆம் திகதி ஹசீனாவின் வீட்டிற்குள் மர்மநபர் ஒருவர் புகுந்து, அவரது குடும்பத்தினரை கத்தியால் சரமாரி தாக்கினார். இதில் ஹசீனா மற்றும் அவரது மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

உறவினரான ஹாஜிரா படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது இந்த கொலைக்கான காரணமானவர், ஏர் இந்தியாவின் கேபின் க்ரூவாக பணியாற்றிய பிரவீன் அருண் கௌகுல் (வயது 35) என்று தெரியவந்துள்ளது.

இதில் பிரவீன் அருண் கௌகுலே ஒருதலையாக அய்னாஸை காதலித்து தெரியவந்தது, ஆனால், இவர் காதலுக்காக கொலை செய்தாரா அல்லது வேறு காரணத்திற்க்காக கொலை செய்தாரா என்ற கோணத்தில் பொலிஸார் அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில், குடாச்சியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பிரவீனை பொலிஸார் நேற்றைய தினம் (2023.11.16) கைது செய்து, உடுப்பி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.


சினிமாசெய்திகள்
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
குபேரா திரைப்பட திரைவிமர்சனம்...
2025-06-22 11:03:19
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள குபேரா திரைப்பட திரைவிமர்சனம்.
ஜாக்கி சானுடன் நடிக்கும் சிம்பு.! விரைவில் அறிவிப்பு:
2025-05-29 20:42:27
ஆக்ஷனில் பல சாதனைகளை படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.
விஜய் ஆண்டனியின் 26 வது பட மாஸ் அப்டேட்
2025-05-18 10:50:19
ஜோஷுவா சேதுராமன் இயக்கும் இந்தப் படத்தினை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார்.