yarlathirady.com

முருங்கையின் மருத்துவக்குணங்கள் - உணவு எளிதில் ஜீரணமாவதுடன் உணவிலுள்ள சத்துக்கள் இரத்தத்துடன் கலக்க இது உதவும்.

[2023-11-22 05:56:29] Views:[391]

முருங்கை க்கீரை உடல் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் மிகவும் ஏற்றது. நரம்புகளையும் வலுவூட்டுவதுடன் பித்தத்தைத் தணிக்கும் ஆற்றல் இதற்குண்டு விட்டமின் A,B,C ஆகிய உயிர்ச்சத்துக்களுடன் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்துக்களும் ஏராளமாய் உள்ளன. பித்தம் சம்பந்தமான நோயால் வருந்துபவர்கள் இவ் முருங்கைக் கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிடலாம்.


மனித உடலில் வயிறு, குடல், கல்லீரல், மண்ணீரல் போன்ற உறுப்புகளுக்கு வலுவைத் தரவல்லது. சிலருக்கு குரல் வளையில் வீக்கமும் வலியும் இருக்கும் அத்தகையவர்கள் இக்கீரையை சாப்பிட வீக்கமும் வலியும் விரைவில் குணமாகும்.


மலச்சிக்கலையும் போக்கக் கூடியது. வயிற்றில் வேண்டாத புழு, பூச்சிகள் இருந்தாலும் அதை மலத்துடன் வெளியேற்றும் சக்தி இந்தக் கீரைக்கு உண்டு. உணவு எளிதில் ஜீரணமாவதுடன் உணவிலுள்ள சத்துக்கள் இரத்தத்துடன் கலக்க இது உதவும்.


இவ் முருங்கைக் கீரை இரத்தத்திலுள்ள கொழுப்பை குறைக்க வல்லது. இரத்தத்தில் அளவுக்கதிகமாக கொழுப்புச் சத்து சேருவது மிகவும் ஆபத்தானது. கண் தொடர்பான நோய் கண் தொடர்பான நோய்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதமாகும்.பால் சுரப்பு இல்லாத தாய்மார்களுக்கு முருங்கைக் கீரையை சமைத்துச் சாப்பிடக் கொடுத்து வந்தால் பால் சுரப்பு மிகுதிப்படும். இரத்த அழுத்த நோயால் வருந்துபவர்கள் தொடர்ந்து இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர தொல்லை நீங்குவதுடன் இரத்தம் தூய்மைப்படும்.


சினிமாசெய்திகள்
குட் பேட் அக்லி
2025-04-10 19:52:04
சிறந்து விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அடுத்த பைனலிஸ்ட் இவர் தானா - சரிகமப சீசன் 4
2025-04-09 11:41:31
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள திவினேஷ் தான் 4 வது இறுதி போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஹ்மான் இசையில் ராம் சரண் நடிப்பில் பெத்தி படம்...
2025-04-06 15:12:52
புச்சி பாபு இயக்க இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள்.
நடிகர் அஜித் வாங்கிய சம்பளம்
2025-04-06 14:59:21
குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடிக்க அஜித் ரூ. 163 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாஸ் லுக்கில் அஜித் - குட் பேட் அக்லி
2025-04-04 12:13:24
இப்படத்தின் டீசர் சென்ற மாதம் வெளிவந்து பட்டையை கிளப்பியது.
பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார்..!
2025-03-26 09:18:24
பாரதி ராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான 48 வயதான மனோஜ் பாரதிராஜா இதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வில் இருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.