yarlathirady.com

மாவீரர் தினமானது உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறதா : அல்லது புலம்பெயர் பணதிற்காக அனுஷ்டிக்கப்படுகிறதா?

[2023-11-30 17:55:26] Views:[472]

இம்முறை மாவீரர் தின நிகழ்வுகளை முன்னெடுப்பதில் தாயக தமிழ் உறவுகளை விட அரசியல் கட்சிகளே முதன்மையாக செயற்பட்டு வந்தமையை காணக்கூடியதாக இருந்தது. ஆனால் இம்மாவீரர் தின நிகழ்வுகளின் ஊடாக எமது சமூகம் அடையக்கூடிய நன்மை எதுவும் இல்லை என்றே கூறலாம். .யுத்தம் மௌனித்து 14 வருடங்களாகிவிட்டன.யுத்ததின் வடுக்களை ஆற்ற வேண்டிய கால சூழ்நிலையில் அதனை செய்யாமல் மீண்டும் மீண்டும் கடந்த காலத்தை நினைவு கூருவதால் ஏற்படப்போகும் விளைவுகள் பற்றி எவருமே சிந்திப்பதில்லை.


இது உண்மையில் போராளிகளுக்காகவோ மக்களுக்காகவோ அல்ல . அனைத்துமே பணத்திற்கான நாடகம். இம்முறை மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்துவதில் பொது மக்களை விட தமிழ் தேசிய கட்சிகளே ஆர்வம் காட்டி வந்தன. குறிப்பிட்ட கட்சிகள் ஆளுக்கொரு மாவீரர் துயிலும் இல்லங்களை பிடித்துக்கொண்டு புலம் பெயர் உறவுகளை ஏமாற்றி பணம் பெற்றுக்கொண்டு உணர்வு பூர்வமாக நினைவேந்தலை அனுஷ்டிக்காமல் வெகு விமர்சையாக ஏதோ பண்டிகையை கொண்டாடுவதை போல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இது மாவீரர்களின் தியாகத்தை அவமதிக்கும் ஒரு செயற்பாடாகும்.


இத்தகைய நபர்கள் போராட்ட காலத்தில் தாயகத்தில் எம்மோடு இருந்தார்களா? 2009 ஆம் வருடத்திற்கு முன்னர் தாயகத்திலுள்ள துயிலும் இல்லங்களுக்கு சென்று ஒருநாள் அஞ்சலி செலுத்தி இருப்பார்களா? ஆனால் தற்போது மட்டும் இவர்கள் முன்னின்று இந்நிகழ்வுகளை நடத்துகின்றனர் ? இங்கு எவருமே இன பற்றுடனோ தமிழ் பற்றுடனோ செயற்படவில்லை. இதில் புலம்பெயர் பணமே செயற்படுகின்றது. அவர்களுக்கு மக்களின் நலனிலோ அல்லது உயிர் நீத்தவர்களுக்கு உண்மையான நினைவு கூருதலோ அவசியம் இல்லை. அவர்களின் இலக்கு புலம்பெயர் பணம் மட்டுமே. பெறப்படும் பெருந்தொகை பணமும் முன்னாள் போராளிகளுக்கோ அல்லது அவரது குடும்பங்களுக்கோ முறையாக சென்றடைவதும் இல்லை. அவற்றுக்கு என்ன நடக்கின்றது என்பதும் எவருக்கும் தெரியாது. இவர்கள் தொடர்ந்தும் மக்களை முட்டாளாகவே வைத்திருக்க நினைக்கின்றார்கள் என்பதே நிதர்சனம்.


இம்முறை மாவீரர் தின நிகழ்வில் இன்னொரு நாடகமும் அரங்கேறியது. தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா என கூறிக்கொண்டு பெண்ணொருவர் உரை நிகழ்த்திய காணொளி . தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தினை நன்கு அறிந்த பலரும் அது துவாரகா அல்ல என்பதை உறுதிபடுத்தியுள்ளனர். இது மக்களை ஏமாற்றும் விடயம் அல்லவா? இது போன்ற போலி காணொளிகளை தயாரித்து வெளியிடுவோரின் நோக்கம் தான் என்ன ? இதன் மூலம் தமிழ் மக்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் ? தமிழ் மக்களை முட்டாள்கள் என நினைத்துவிட்டார்களா?


எமது தமிழர் தாயகத்தில் இன்றுவரை தீர்வு எட்டப்படாத பல விடயங்கள் உள்ளன . எமது தமிழீழ மீனவர் பிரச்சினைக்கு இந்திய அரசிடம் கலந்துரையாடி அதற்கான தீர்வினை பெற இதுவரை எவருமே முயற்சிக்கவில்லை .இங்கிருக்கும் திண்மக்கழிவுகள் பிரச்சினைகளுக்கும் அவற்றை முறையாக அப்புறப்படுத்தவும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எமது மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்த்து அவர்களுக்கு குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கும் எவராலும் முடியவில்லை. இத்தனைக்கும் எமது வடகிழக்கிலுள்ள அரச நிறுவனங்களில் பணிபுரியும் அரச அதிகாரிகளில் 90 வீதமானவர்கள் தமிழர்களே . தமிழ் பேசும் அதிகாரிகள் இருந்தும் நமது மக்களின் பிரச்சினைகளுக்கு இன்றுவரை தீர்வு காணப்படாதது ஏன் என்று மக்கள் சிந்திக்க வேண்டும்.


யுத்தத்தில் பொதுமக்கள் போராளிகள் மற்றும் இராணுவத்தினர் என அனைத்து தரப்பிலும் இழப்பு உள்ளது..மாவீரர் தினத்தை தற்போது நினைவு கூர்வதால் இனி நடக்கப் போவது என்ன? கடந்த காலத்தை மாற்றியமைக்க இனி எவராலும் முடியாது. இனிவரும் சந்ததியினராவது இந்நாட்டில் சந்தோஷமாக வாழ வேண்டும் அவர்கள் மனதிலும் கடந்த கால கசப்பான சம்பவங்களை கூறி அவர்களையும் மீண்டும் ஒரு இருண்ட யுகம் நோக்கி தள்ளாதீர்கள் .கடந்த காலத்தில் இடம்பெற்ற அனைத்தையும் மறந்து அனைவரும் ஒற்றுமையாக வாழ வழி செய்ய வேண்டும். அதைவிடுத்து மீண்டும் இவற்றை இப்போது உள்ள சந்ததியினருக்கு கூறும் பொழுது அது மீண்டும் ஆறாத ரணமாக அவர்கள் மனதில் பதியும் அல்லவா?


மாவீரர் தின நினைவேந்தலில் காட்டும் வேகத்தையும் அக்கறையையும் போரின் பொது பாதிக்கப்பட்ட மக்களின் வளர்ச்சியிலும் , வேதனையில் வாடும் முன்னாள் போராளிகள் மீதும் காட்டினால் தமிழ் இனம் மீண்டெழும்.உண்மையில் அம்மாவீரர்களுக்கு நீங்கள் நன்றி கூறுவதாக இருந்தால் மாவீரர் தின ஊர்வலங்களுக்கும் பேரணிகளுக்கும் பதாதைகளுக்கும் செலவு செய்யும் தொகையை போரில் கலந்து கொண்டு உயிர் நீத்த மற்றும் கை கால்களை இழந்த முன்னாள் போராளிகளுக்கும் ,போராளிகளின் குடும்பங்களுக்கும் கொடுத்து உதவுங்கள். போராளிகளின் பேரில் சமூக சேவைகளை முன்னெடுங்கள். அவர்களின் ஆத்மா சாந்தியடையும் . அதை விடுத்து புலம்பெயர் பணத்திற்காக கல்லறைகளை சுத்தம் செய்யும் அரசியல் கள்வர்களின் வலைகளுக்குள் ஒருபோதும் சிக்காதீர்கள்.


சினிமாசெய்திகள்
குட் பேட் அக்லி
2025-04-10 19:52:04
சிறந்து விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அடுத்த பைனலிஸ்ட் இவர் தானா - சரிகமப சீசன் 4
2025-04-09 11:41:31
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள திவினேஷ் தான் 4 வது இறுதி போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஹ்மான் இசையில் ராம் சரண் நடிப்பில் பெத்தி படம்...
2025-04-06 15:12:52
புச்சி பாபு இயக்க இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள்.
நடிகர் அஜித் வாங்கிய சம்பளம்
2025-04-06 14:59:21
குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடிக்க அஜித் ரூ. 163 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாஸ் லுக்கில் அஜித் - குட் பேட் அக்லி
2025-04-04 12:13:24
இப்படத்தின் டீசர் சென்ற மாதம் வெளிவந்து பட்டையை கிளப்பியது.
பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார்..!
2025-03-26 09:18:24
பாரதி ராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான 48 வயதான மனோஜ் பாரதிராஜா இதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வில் இருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.