வெளிச்சம் தரும் காளான்கள்
[2023-12-02 10:50:30] Views:[473] இறைவனின் படைப்பில் உலகில் சுமார் 103 வகையான ஒளிரும் காளான்கள் உள்ளதாக தெரிய வருகிறது . இவ்வகை காளான்களின் வித்துகள் பரவுவதற்கு உதவும் பூச்சிகளையும், ஏனைய உயிரினங்களையும் கவர்வதற்காக ஒளிரும் தன்மையை பெற்றிருக்கின்றன.
இந்த காளான்களில் நடைபெறும் வேதியியல் மாற்றத்தின் விளைவால் ஏற்படும் அதிகப்படியான ஆற்றல் இளம் பச்சை ஒளியாக வெளியேறுவதுடன் இதுவே அக்காளான்களின் திசுக்களை ஒளிரவைக்கிறது. தமிழகத்தின் கன்னியாகுமரி வன உயிரின சரணாலய பகுதியில் வனத்துறையினருடன் இணைந்து ஆய்வுக்காக சென்ற குழுவினர், ஒளிரும் காளான்களை புகைப்பட பதிவு செய்துள்ளனர்.
பகலிலும் இந்த வகை காளான்கள் ஒளிர்ந்து கொண்டேதான் இருக்கும்.