ரயில் விபத்து - 500 பேர் படுகாயம்
[2023-12-16 05:56:06] Views:[376] சீனா - பீஜிங் ,ஷங்பிங் நகரில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளததாகவும்
இதில் 500க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளதுடன்102 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
ஷங்பிங் நகரில் இருந்து புறப்பட்ட பயணிகள் ரயில் தண்டவாளத்தில் பனி படர்ந்திருந்ததால் தானியங்கி அமைப்பால் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதன்போது மற்றுமொரு ரயில் வந்து நிறுத்தப்பட்டிருந்த ரயில் மீது மோதியுள்ளது. 2 ரயில்களிலும் பயணித்த 500க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாகவும் தெரிய வருகிறது.