yarlathirady.com

15 ஆவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு- கணவன் மனைவிக்கு உடனடியாக மரண தண்டனை

[2024-02-03 12:29:57] Views:[466]

சீனாவில் 15 ஆவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.

சீனாவை சேர்ந்தவர் ஜாங் போ இவரது முதல் மனைவி சென் மெய்லின். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு மகள் மற்றும் ஒரு வயதில் ஒரு மகன் இருந்தநிலையில், 2020ம் ஆண்டு பிப்ரவரியில் இந்த தம்பதி விவாகரத்து செய்து குழந்தைகள் இருவரும் தந்தையிடம் இருந்த சூழலில், யே செங்சென் என்ற வேறொரு பெண்ணுடன் ஜாங் போவுக்கு தொடர்பு ஏற்பட்டதனால், ஜாங்குக்கு முன்பே திருமணம் நடந்து 2 குழந்தைகள் இருப்பது செங்சென்னுக்கு பின்னரே தெரிய வந்துள்ளது.

தங்களுடைய உறவுக்கு இது ஒரு தடையாக இருக்கும் என செங்சென் நினைத்திருக்கிறார்.அதனால், அவர்கள் இருவரையும் தங்கள் வாழ்வில் இருந்து விலகி இருக்கும் படி சென் விரும்பியுள்ளார். ஒரு புது வாழ்வை தொடங்க அந்த பச்சிளம் குழந்தைகளை கொல்ல வேண்டும் என ஜாங்கை சென் கட்டாயப்படுத்தி உள்ளார்.

பின்னர், அவர்கள் வசித்த குடியிருப்பின் 15வது மாடியில் இருந்து ஜன்னல் வழியே குழந்தைகள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

ஜாங்கிடம் போலீசார் விசாரணை நடத்தினர். குழந்தைகள் விழும்போது, தூங்கி கொண்டிருந்தேன் என ஜாங் கூறியுள்ளார்.கீழே பொதுமக்கள் அலறிய சத்தம் கேட்டு எழுந்தேன் என்றும் கூறியுள்ளார். குழந்தைகள் இறந்த தகவல் அறிந்ததும் முதல் மனைவி மெய்லின் அதிர்ச்சியடைந்து உள்ளார்.

தன்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்று கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் ஜாங் மற்றும் செங்சென்னுக்கு சுப்ரீம் கோர்ட்டு, மரண தண்டனை வழங்கியது. 2 ஆண்டுகளுக்கு பின்னர், கடந்த புதன்கிழமை அவர்களுக்கு ஊசி வழியே மருந்து உட்செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.


சினிமாசெய்திகள்
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
குபேரா திரைப்பட திரைவிமர்சனம்...
2025-06-22 11:03:19
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள குபேரா திரைப்பட திரைவிமர்சனம்.
ஜாக்கி சானுடன் நடிக்கும் சிம்பு.! விரைவில் அறிவிப்பு:
2025-05-29 20:42:27
ஆக்ஷனில் பல சாதனைகளை படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.