இஸ்ரேலின் கொடூர தாக்குதல்: ஒரே நேரத்தில் 90 பேர் பலி!
[2024-03-04 11:29:54] Views:[297] இஸ்ரேல் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதல்களினால் கடந்த 24 மணி நேரத்தில் 90 பேர் காசாவில் பலியாகியுள்ளனர். அத்தோடு, குறித்த தாக்குதலினால் மேலும் 177 பேர்படுகாயமடைந்துள்ளதாகவும் கூரப்படுகின்றது.
இதன்காரணமாக இஸ்ரேல் போரினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 30 410 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, இதுவரை சுமார் 71 000 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக பலஸ்தீனிய சுகாதார அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா சபையின் போர் நிறுத்தம் குறித்த தீர்மானத்துக்குப் பிறகும், தொடர்ந்து இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிகழ்ந்தவண்ணம் உள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக 2.3 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இடப் பற்றாக்குறை, பாதுகாப்பற்ற சூழலால், லட்சக்கணக்கான பாலஸ்தீனக் குடிமக்கள் சாலைகளிலும், மைதானங்களிலும், தற்காலிக கூடாரங்களை அமைத்துத் தங்கிவருகிறார்கள்.
காஸா பகுதியில் உள்ள முழு மருத்துவ பராமரிப்பு முறையும் மோசமடைந்து வருகிறது. அக்டோபர் 7 முதல் 20,400க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்" எனக் குறிப்பிட்டிருக்கிறது.