சாதனைமேல் சாதனை படைக்கும் தமிழன்.
[2024-03-11 15:15:29] Views:[511] இங்கிலாந்துக்கு எதிரான 100வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த சாதனையை நிகழ்தியுள்ளார். வரலாற்றில் எந்தவொரு பந்துவீச்சாளராலும் பதிவுசெய்யப்படாத, முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் 100வது போட்டியில் எந்தவொரு பந்துவீச்சாளராலும் பதிவுசெய்யப்படாத சிறந்த ஒரு பந்துவீச்சாக இது மாறியது.
இங்கிலாந்துக்கு எதிரான 100வது டெஸ்ட் போட்டியில் பங்குபற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின் 128 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றி, தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் முரளிதரன் படைத்திருந்த 141 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகள் என்ற உலக சாதனையை தகர்த்து அசத்தியுள்ளார். அதேசமயம் இந்தியாவிற்கு அதிகமுறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த அனில் கும்ப்ளேவின் சாதனையை அஸ்வின் முறியடித்து 36 முறை 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.