yarlathirady.com

தேனின் அற்புதமான மகத்துவங்கள்.

[2024-04-04 09:04:23] Views:[196]

பூமியில் கண்டுபிடிக்கப்பட்ட உணவுகளிலேயே மனித ரத்தத்திற்கு மிக நெருக்கமான உணவுப் பொருள் தேன் என கூறப்படுகிறது. ரசாயனத் தன்மையில் சிறிதளவு மாற்றம் செய்தாலே அது மனித ரத்தத்தின் தன்மையைப் பெற்றுவிடுமாம்.

இந்த நிலையில், தினமும் ஒரு தேக்கரண்டி தேன் பருகினாலே, ஒரு நபரின் உடலில் பாரியளவில் மாற்றங்கள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் சுமார் 3000 வருடங்களுக்கு கெட்டுப்போகாத ஒரே உணவு வகை தேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேன், மற்றும் தேனின் உள்ளடக்கப் பொருட்கள், பத்தாண்டுகள் தொடங்கி நூற்றாண்டுகள் வரை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

தகுந்த ஈரப்பதமே தேனைப் பாதுகாப்பதிலுள்ள முக்கிய நுணுக்கமாக அமைந்துள்ள நிலையில், 3000 ஆண்டுகள் ஆனாலும் தேன் கெட்டு போகாது என கூறப்படுகிறது.

பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே தேன் வேட்டை ஆரம்பமாகியிருக்கலாமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.ஏறத்தாழ 2700 வருடங்களாக தேன் பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பழங்காலத்திலிருந்தே தேன் சேகரித்தல் இருந்திருக்கிறது.

அத்துடன், ஃப்ரக்டோஸ், க்ளுகோஸ் போன்றவை தேனில் உள்ளடங்கியுள்ள நிலையில், அதில் கொழுப்புச் சத்து சிறிதளவும் இல்லை.

இந்த பின்னணியில், உலகிலேயே கெட்டுப்போகாத ஒரே உணவு வகை தேன் என தெரிவிக்கப்பட்டாலும், தற்போது கடைகளில் விற்பனை செய்யப்படும் தேன் போத்தல்களில் காலாவதி திகதி குறிப்பிடப்பட்டுள்ளது. சுத்தமான தேனுக்கு காலவதி திகதி இல்லதா நிலையில், தற்போது சந்தைகளில் இராசாயணங்கள் கலந்த தேன் வகைகளே விற்பனை செய்யப்படுகின்றன.

சுத்தமான தேன் மலைக்கிராமப்புரங்களில் மாத்திரமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
குட் பேட் அக்லி
2025-04-10 19:52:04
சிறந்து விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அடுத்த பைனலிஸ்ட் இவர் தானா - சரிகமப சீசன் 4
2025-04-09 11:41:31
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள திவினேஷ் தான் 4 வது இறுதி போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஹ்மான் இசையில் ராம் சரண் நடிப்பில் பெத்தி படம்...
2025-04-06 15:12:52
புச்சி பாபு இயக்க இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள்.
நடிகர் அஜித் வாங்கிய சம்பளம்
2025-04-06 14:59:21
குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடிக்க அஜித் ரூ. 163 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாஸ் லுக்கில் அஜித் - குட் பேட் அக்லி
2025-04-04 12:13:24
இப்படத்தின் டீசர் சென்ற மாதம் வெளிவந்து பட்டையை கிளப்பியது.
பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார்..!
2025-03-26 09:18:24
பாரதி ராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான 48 வயதான மனோஜ் பாரதிராஜா இதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வில் இருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.