இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி.
[2024-04-07 11:29:17] Views:[248] 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு இருபது உலகக்கிண்ண கிரிக்கெட் கோப்பை போட்டித் தொடருக்கு இலங்கை அணி நேரடியாகத் தகுதி பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது. குறிப்பாக போட்டியை நடத்தும் நாடாக இலங்கை இருப்பதால் இந்த வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ணகோப்பை இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கையில் நடத்த ஐசிசி தீர்மானித்துள்ளது. எனவே 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ண கோப்பை போட்டித் தொடருக்கு இலங்கையும் இந்தியாவும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மேலும் 2026 T20 உலகக்கிண்ண கோப்பை தொடரில் 20 அணிகள் பங்குபெறவுள்ள நிலையில், போட்டித் தொடருக்கு 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்படத்தக்க விடயமாகும்.