லங்கா பிரீமியர் லீக் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு!
[2024-04-09 10:38:44] Views:[260] 2024 ஆம் ஆண்டிற்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டி தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொடர்பின் முதல் போட்டி ஜூலை 1ஆம் திகதி கண்டி மற்றும் தம்புள்ளை அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது. ஜீலை 1ஆம் திகதி முதல் ஜூலை 22 ஆம் திகதி வரை நடைபெறும் இப்போட்டிகளில் இறுதிப் போட்டி உட்பட 24 போட்டிகள் நடைபெறவுள்ளன.
குறித்த போட்டிகள், பல்லேகல மைதானம், தம்புள்ளை மைதானம் மற்றும் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளாத கூறப்படுகின்றது. இறுதிப் போட்டி ஜூலை 22 ஆம் திகதி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிட தகுந்த விடயமாகும்.