GOAT பட முக்கிய அறிவிப்பு-ரசிகர்கள் உற்சாகத்தில்...!
[2024-04-14 14:48:25] Views:[360] நடிகர் விஜய்யின் நடிப்பில் GOAT படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ்கோவில் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. வரும் 17ம் தேதியுடன் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் செப்டம்பர் 5ம் தேதி இந்த படம் சர்வதேச அளவில் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதன் ப்ரோமோவை படக்குழுவினர் நேற்று மாலை வெளியிட்டுள்ளனர். நீண்ட காலங்களுக்கு பிறகு விஜய்யுடன் யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தில் இணைந்துள்ள சூழலில் படத்தின் இசை சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.