அதிகமான வெப்ப காலத்தில் உடல் சூட்டை தனிக்க இந்த பொருள் மட்டுமே போதும்....!
[2024-04-18 09:33:14] Views:[230] கோடை காலத்தில் உடல் சூட்டை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பொருட்களில் ஒன்றான நன்னாரி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது.
நன்னாரி ஜீஸ் எவ்வாறு செய்வது அதன் பயன்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.
நன்னாரி வேர்கள் சித்த மருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் முக்கிய பங்கு வகிக்கிப்பதோடு மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் கொண்டு நன்னாரி ஜீஸ் தயாரிக்கப்படுகிறது.இந்த நன்னாரி ஜீஸ் பானமானது பருவகால காய்ச்சலுக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது.
நன்னாரி ஜீஸ் தயாரிப்பது எப்படி?
1L நன்னாரி ஜீஸ் தயார் செய்ய, ஒருகிலோ நன்னாரி வேரை உரல் அல்லது மிக்ஸியில் இடித்து, அதை 6L வெந்நீரில் போட்டு ஒரு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடேற்றி 1.5Lஆக வற்ற வைத்து இறக்கி வடிகட்டி, அதனுடன் 1kg சீனிக்கற்கண்டை தூளாக்கிப் போட்டு மீண்டும் அடுப்பில் வைத்து பாகு அல்லது தேன் பதம் வந்தவுடன் இறக்கி உடனே வேறொரு பாத்திரத்தில் ஊற்றிவிட வேண்டும். சூடு ஆறியதும் இதைக் பரிமாறலாம். வறட்டு இருமலுக்கு உடனடி தீர்வு தரும்
நன்னாரியின் பயன்கள்
பச்சை நன்னாரி வேர் 5g எடுத்து அதை நன்கு அரைத்து ஒரு குவலை பாலில் கலந்து பருகுவதன் மூலம் நீர் கடுப்பு, வறட்டு இருமல் ஆகியவற்றுக்கு உடனடி தீர்வு பெறலாம். தொடர்ச்சியாக இதை சாப்பிட்டு வந்தால் நரைமுடியும் நீங்கி கருமை பெறும்வயிற்றில் உள்ள பிரச்சினைகள் தீரும்
நன்னாரி வேர் பொடியுடன், கற்றாழை சோறு சேர்த்து உண்டால் வயிறு, குடலில் உண்டாகும் நோய்கள் குணமாகும். இவை தவிர விஷ கடிகளால் உண்டாகும் பக்க விளைவுகள் நீங்கும், சிறுநீரக நோய்க்கும் உதவும். ஆண்மை பெருகுவதற்கு நன்னாரி வேரை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும். நன்னாரி வேர்களை வாழை இலையில் வைத்து கட்டி எரித்து சாம்பலாக்கி அதனுடன் தேவையான அளவு சீரகம், சர்க்கரை கலந்து பருகிவர சிறுநீர் தொடர்பான நோய்கள் விலகும்
நீரிழிவை தடுக்கும்
அதேபோல் பச்சை நன்னாரி 20g எடுத்து அதை நன்கு சிதைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஒரு நாள் முழுவது்ம ஊறவைக்க வேண்டும். பின்னர் அந்த நீரை வடிகட்டி காலை, மாலை என பருகி வந்தால் பீத்தம் நீங்கு, நீரழிவு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும். எனவே நன்னாரியின் பயன்கள் அறிந்து அதனை சிறப்பாக பயன்படுத்தி நலமாக வாழ்வோம்.