சீனாவில் சரிந்து விழுந்த சாலை: பலியானவர்களின் தொகை 36 ஆக உயர்வு...!
[2024-05-03 11:33:39] Views:[300] சீனாவில் கனமழை காரணமாக சாலை இடிந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் டபு கவுண்டியில் உள்ள மீஜோ-டாபு சாலையில் இடம்பெற்றுள்ளது.
மே தின விடுமுறைக்காக நாட்டில் மில்லியன் கணக்கான மக்கள் இந்த சாலையூடாக பயணம் செய்துள்ள நிலையில் நேற்றைய தினம் அதிகாலை 02:00 மணியளவில் மீஜோ-டாபு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு இடிந்து விழுந்த பகுதி 17.9M நீளம் கொண்டது என தெரிவிக்கப்படுகிறது. அதில் 23 வாகனங்கள் மூழ்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.