தடகள கிராண்ட் பிரிக்ஸ் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள்..!
[2024-05-04 10:16:12] Views:[209] ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்றுவரும் 2024 ஆம் ஆண்டிற்கான தடகள கிராண்ட் பிரிக்ஸ் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர்களான நதீஷா ராமநாயக்க மற்றும் யுபுன் அபேகோன் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பெற்று பதக்கங்கள் தனதாக்கி கொண்டுள்ளனர்.
பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் நதீஷா ராமநாயக்க இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
அதே போல ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் யுபுன் அபேகோன் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டு 2024 ஆம் ஆண்டிற்கான தடகள கிராண்ட் பிரிக்ஸ் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு இரண்டு பதக்கங்களை பெற்றுத்தந்துள்ளனர்.