IPL விளையாடிய இலங்கை வீரர்கள் நாடு திரும்பியுள்ளனர்...!
[2024-05-04 12:00:23] Views:[206] சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் வீரர்களான பத்திரன மற்றும் தீக்சன இருவரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், T20 உலகக்கிண்ண தொடருக்கான அணியில் அவர்கள் இடம்பெற்றிருப்பதால், கடவுச்சீட்டு மற்றும் விசா தொடர்பான பணிகளுக்காக இலங்கைக்கு வருகைதந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.
IPL தொடரானது இறுதிகட்டத்தை எட்டும் நிலையில், இவர்களின் வருகை சென்னை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
குறிப்பாக பத்திரனவின் பந்துவீச்சினால் சென்னை அணி பல வெற்றிகளை பெற்றுள்ளது என்பது அனைவரும் அறிந்த விடயமே.
இதுகுறித்து பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவிக்கையில், ''இலங்கை வீரர்கள் விசா பெற உள்ளதால் அவர்களின் அந்த செயல்முறைக்காக இலங்கைக்கு சென்றுள்ளனர். நாங்கள் எங்களின் அடுத்த போட்டியில் அவர்களை திரும்பப் பெறுவோம் மற்றும் அவர்கள் அடுத்த போட்டியில் பங்குபெறுவார்கள்'' என தெரிவித்துள்ளார்.