இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது
[2024-05-11 09:38:21] Views:[195] அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலுக்குமான இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் பங்குபெறும் வீரர்களின் போட்டிக் கட்டணங்கள் 100% உயர்த்தப்பட்டுள்ளதாகவும், அவர்களின் ஆட்டத்திறனுக்கு ஏற்ப கட்டணங்கள் நிர்ணயிக்கப்படவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் வெற்றி, தோல்வி அல்லது சமநிலை என்பதைப் பொறுத்து கட்டண முறைகள் மாறுபடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.