இந்தியன்-2 படம் மூலம் திரையுலக வரலாற்றில் புதுமையை செய்ய திட்டமிட்டிருக்கும் ஷங்கர்...!
[2024-05-16 11:59:56] Views:[354] உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், உருவாகி இருக்கும் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகளும் முடிவடைந்து தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், அலி ஃபைசல், பங்கஜ் திரிபாதி, அசோக் செல்வன், ஜோஜு ஜார், ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
அனேகமாக இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் அதிகாரபூர்வ வெளியீட்டு திகதி வெளியாகும் என்றும் ஜூலை இரண்டாவது வாரம் இந்த படத்தை வெளியீடு செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் போது இந்தியன் 3 திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் கூறப்பட்ட நிலையில் தற்போது இந்தியன்-2 மற்றும் இந்தியன்-3 ஆகிய இரண்டு படங்களின் ட்ரெய்லர்கள் எடிட் செய்யப்பட்டு தயார் நிலையில் இருப்பதாகவும் இந்த நிலையில் இந்தியன்-2 படத்தை வெளியிடும் திரையரங்குகளில் 'இந்தியன்-3 படத்தின் டிரைலரை இறுதியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் திரையுலக வரலாற்றில் இந்த புதுமையை செய்ய ஷங்கர் வேற லெவலில் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே திரையரங்குகளில் இந்தியன்-2 படத்தை பார்க்க திரையரங்குகளுக்கு செல்லும் ரசிகர்களுக்கு இந்தியன்-3 படத்தின் டிரைலரையும் பார்க்கும் வாய்ப்பு இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.