டுபாயயில் நடைபெற்ற சதுரங்கத் தொடரில் முதல் மூன்று இடங்களையும் வென்ற தமிழர்கள்
[2024-05-16 14:38:29] Views:[240] டுபாயில் நடைபெற்ற சதுரங்கத் தொடரில் பல்வேறு நாடுகளிலிருந்து பல புகழ் பெற்ற வீரர்கள் பங்குபற்றியிருந்தனர். இந்த தொடரின் முதல் மூன்று இடங்களையும் தமிழர்களே பெற்று சாதனை படைத்துள்ளனர்.
முதலாவது இடத்தினை திருச்சியை சேர்ந்த பிரணவ் பிடித்து தங்கப்பதங்கத்தை பெற்றுக்கொண்டார்.
இரண்டாம் இடத்தினை அரவிந்த் சிதம்பரம் பிடித்து வெள்ளி பதக்கத்தை பெற்றார்.
மூன்றாம் இடத்தினைப் பிடித்த பிரணேஸ்வெண்கலப் பதக்கத்தையும் தட்டிச் சென்றுள்ளார்.
இதேவேளை உலகின் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற ஒரு தொடரில் முதல் மூன்று இடங்களையும் தமிழர்களே பிடித்திருப்பது என்பது மிகப் பெரிய சாதனையாக கருதி அனைவரும் பாராட்டி வருகின்றனர்.