2024 உலக கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரில் ICC கொண்டு வந்துள்ள முக்கிய தீர்மாணம்...!!
[2024-05-18 21:55:43] Views:[277] 2024 இருபதுக்கு இருபது உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதிப் போட்டிக்கு கூடுதல் திகதி வழங்கப்படாது என்று ICC முடிவெடுத்துள்ளது.
போட்டியின்போது மழை குறுக்கிட்டால் 4 மணி நேரம் மட்டும் கூடுதல் நேரம் வழங்க ஐசிசி மற்றும் மேற்கிந்திய கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளன.
2024 ஆம் ஆண்டு இருபதுக்கு இருபது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 2ஆம் திகதி தொடங்குவதுடன் இறுதிப் போட்டி ஜூன் 29 ஆம் திகதி நடைபெற உள்ளது.
போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர், மழையினால் தடங்கல் ஏற்பட்டால், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு மேலதிக நாட்கள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
முதல் அரையிறுதிக்கு கூடுதல் நாள் கொடுத்தாலும், இரண்டாவது அரையிறுதிக்கு கூடுதல் நாள் கொடுக்க முடியாது. இரண்டாவது அரையிறுதிப் போட்டிக்கு கூடுதல் நாள் வழங்கப்பட வேண்டுமென்றால், இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வெற்றி அணிக்கு விளையாடுவதற்கு இன்னும் 24 மணி நேரத்திற்கும் குறைவாகவே இருக்கும்.
இதன் காரணமாக இரண்டாவது அரையிறுதி போட்டிக்கு கூடுதல் நாள் வழங்காமல் 4 மணி நேரம் மட்டும் கூடுதலாக வழங்க சர்வதேச கிரிக்கெட் சபை மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளன.