வானூர்தி விபத்தில் ஈரான் அதிபர் உட்பட 09 பேர் உயிரிழப்பு!
[2024-05-20 13:43:23] Views:[248] உலங்குவானூர்தி விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி (Ebrahim Raisi) உயிரிழந்ததாக ஈரான் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
அதிபர் இப்ராகிம் ரைசியுடன் உலங்குவானூர்தியில் பயணித்த வெளியுறவுத்துறை மந்திரி உசைன் அமீர், கிழக்கு அசர்பைஜான் மாகாண கவர்னர் மாலிக் ரஹ்மதி உள்பட 9 பேர் குறித்த விபத்தில் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
துருக்கியின் ஆளில்லா விமானங்கள் மூலம் தப்பிரிஸ் நகரிலிருந்து 100 கிலோமீற்றர் தொலைவில் ஈரான் ஜனாதிபதி பயணம் செய்த உலங்குவானூர்தியின் சிதைவுகள் காணப்படுவதாக அல்ஜசீராதெரிவித்துள்ளது.
இதேவேளை 75 பேர் கொண்ட மீட்பு குழுவினரை அந்த பகுதிக்கு அனுப்பியுள்ளதாக ஈரானின் செம்பிறைச்சங்கம் தெரிவித்துள்ளது.