விராட் கோலிக்கு உயிர் அச்சுறுத்தல்..! பயிற்சி ஆட்டம் இரத்து:
[2024-05-23 11:30:27] Views:[231] 17 வது IPL போட்டிகள் கடந்த மார்ச் மாதம் 22 ம் திகதி தொடங்கிய நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
நேற்றையதினம் நடந்த எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் RCB அணியை RR அணி வீழ்த்தி வெற்றிபெற்றதை அடுத்து RCB அணி IPL போட்டியில் இருந்து வெளியேறியது.
இவ்வாறான நிலையில் திடீரென போட்டிக்கு முன்பதான பயிற்சி ஆட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பை பெங்களூரு அணி இரத்து செய்திருந்தது.
இதற்கான காரணத்தை அந்த அணி நிர்வாகம் தெரிவிக்கையில் விராட் கோலியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கிடைத்த புலனாய்வு தகவலால் பயிற்சி ஆட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு என்றவற்றை தாங்கள் இரத்து செய்ததாக அறிவித்துள்ளது.