IPL கிண்ணத்தை வெல்ல இன்று சென்னையில் பலப்பரீட்சை...!!
[2024-05-26 16:05:14] Views:[219] கடந்த ஒருமாத காலமாக பரபரப்பாக நடைபெற்று வரும் IPL ஆட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுக்கு வருகிறது.
இன்றய தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தப்போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.
இந்தப்போட்டியில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன.
கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை அஹமதாபாத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியுடனான முதலாவது தகுதிகாண் போட்டியில் வெற்றி கண்ட கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெள்ளிகிழமை (24) நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகளுக்கடையேயான இறுதிச் சுற்றின் மூன்றாவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 36 ஓட்டங்களால் வெற்றிபெற்று இந்த வருட IPL தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடதக்கது.