yarlathirady.com

தோனியின் ஓய்வு குறித்து சென்னை அணி வெளியிட்டுள்ள தகவல்...!

[2024-05-31 21:03:54] Views:[231]

மகேந்திர சிங் தோனியின் ஓய்வு குறித்து சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) காசி விஸ்வநாதன் பேசியுள்ளார்.

2024 IPL தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் 2025ஆம் ஆண்டு IPL தொடரிலும் MS தோனி விளையாடுவாரா என்ற கேள்வியெழும்பியுள்ளது.

சென்னை அணியின் தலைவரான தோனி 2024 ஐபிஎல் தொடர் ஆரம்பத்தில் அணித்தலைவர் பதவியிலிருந்து விலகி ருதுராஜ் கெய்க்வாடிடம் தலைமை பொறுப்பை ஒப்படைத்தார்.

நடப்பு சீசனில் 14 போட்டிகளில் விளையாடிய CSK அணி 7 போட்டிகளில் மட்டுமெ வெற்றிப் பெற்று 14 புள்ளிகளை பெற்றது. எனினும் தல தோனி நடப்பு IPL தொடரில் சிறப்பாகவே விளையாடியுள்ளார்.

எனவே இதுவே தோனியின் இறுதி தொடராக இருக்கலாம் என தோனி இரசிகர்கள் கவலை வெளியிட்டார்கள்.

இந்நிலையில் சென்னை அணியின் CEO காசி விஸ்வநாதன் தோனியின் ஓய்வு குறித்து பேசியுள்ளார். அதாவது, தோனி ஓய்வு பெறுகிறாரா அல்லது விளையாடுகிறாரா என்பது குறித்து அவர் தான் பதில் அளிக்க முடியும்.

அவர் எடுக்கப் போகும் முடிவிற்கு நாங்கள் மதிப்பளிக்க வேண்டும். இருப்பினும் அடுத்த சீசனில் தோனி விளையாடுவார் என நம்புகிறோம். அடுத்த சீசனிலும் தோனி விளையாட வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அதுவே ரசிகர்களின் எதிர்பார்பாகவும் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.


சினிமாசெய்திகள்
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
குபேரா திரைப்பட திரைவிமர்சனம்...
2025-06-22 11:03:19
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள குபேரா திரைப்பட திரைவிமர்சனம்.
ஜாக்கி சானுடன் நடிக்கும் சிம்பு.! விரைவில் அறிவிப்பு:
2025-05-29 20:42:27
ஆக்ஷனில் பல சாதனைகளை படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.