முடிவுக்கு வரும் சீரியல் தெரியுமா?
[2024-06-04 11:31:56] Views:[257] விஜய் டிவி மற்றும் சன் டிவி தொடர்கள் தான் இப்போது தமிழ் சின்னத்திரையில் கலக்கும் சீரியல்களாக உள்ளது. வெற்றிகரமாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் தொடர் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறதாக தெரிய வருகிறது.
இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் தொடர் முடிவுக்கு வருவதால் அந்த இடத்தை நிரப்ப டாப் சீரியலின் நேரத்தை மாற்றியுள்ளதாகவும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சிங்கப்பெண்ணே தொடர் இனி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாகவும் இரவு 8 மணிக்கு இனி புதியதாக தொடங்கி இருக்கும் மருமகள் தொடர் ஒளிபரப்பாக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.