அஜித்தின் நடிப்பில் இரண்டு திரைப்படங்கள்
[2024-06-09 11:17:47] Views:[265] விடாமுயற்சி திரைப்படத்திலும் மற்றும் குட் பேட் அக்லி எனும் திரைப்படத்திலும் அஜித் நடித்து வருவதாக தெரிய வருகிறது.
இதில் விடாமுயற்சி படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த நேரத்திலேயே குட் பேட் அக்லி திரைப்படத்திற்கான படப்பிடிப்பையும் துவங்கினர் அஜித். இந்த நிலையில், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குட் பேட் அக்லி முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், அடுத்ததாக விடாமுயற்சியின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அஜித் இணைகிறார் எனவும் தீபாவளிக்கு விடாமுயற்சி வெளிவரும் எனவும் கூறப்படுவதாகவும் அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. கண்டிப்பாக அடுத்த ஆண்டு பொங்கலுக்கு குட் பேட் அக்லி வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளனர்.