மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாம் அறிவிப்பு...!
[2024-06-13 10:38:29] Views:[241] எதிர்வரும், 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான சர்வதேச ஒருநாள் இலங்கை கிரிக்கெட் மகளிர் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த குழாமில், ICC மகளிர் சம்பியன்ஷிப் தொடரில் விளையாடவுள்ள அனேகமான வீராங்கனைகள் உள்வாங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்துள்ளது.
சமரி அத்தபத்து தலைமையில் 16 வீராங்கனைகளைக் கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாத்தை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு நேற்று பெயரிட்டது.