பச்சை குத்திக்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...!!
[2024-06-17 09:40:22] Views:[109] சமீப காலமாக இளைஞர்களிடையே, உடலில் பச்சை குத்திக் கொள்ளும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.
பச்சை குத்திக்கொள்வது (tattoo) உங்கள் தோலில் நிரந்தரமாக இருக்கும்.
ஆனால், ஒரு நபர் பச்சை குத்திக்கொள்வதற்கு எவ்வளவு அதிகமாக மை பூசப்படுகின்றாரோ, அந்த அளவுக்கு அவர் ஒரு குறிப்பிட்ட வகை இரத்த புற்றுநோய்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது என சமீபத்தில் ஒரு புதிய ஆராய்ச்சி கூறுகிறது.
உடலில் பச்சை குத்திக்கொள்வதால், லிம்போமா (LYMPHOMA) என்ற இரத்தப் புற்றுநோய் உருவாகும் அபாயம் 21% வரை இருப்பதாக சுவீடன் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லிம்போமா (LYMPHOMA) இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 2,938 பேர் உட்பட மொத்தம் 11,905 பேர் மேற்படி ஆய்வுக்கு உற்படுத்தப்பட்டனர்.
பச்சை குத்தாதவர்களுடன் ஒப்பிடும்போது பச்சை குத்திக்கொண்டவர்களக்கு புற்றுநோய் செல்கள் வேகமாக வளரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.இது குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறமை குறிப்பிடதக்கது.