ரொனால்டோவை 'தல' என குறிப்பிட்டுள்ள FIFA: கொண்டாடும் தோனி ரசிகர்கள்..!!
[2024-06-19 10:47:38] Views:[184] சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், டோனியின் புகழ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்த 'தல' என்ற வார்த்தை கால்பந்து உலகக் கோப்பையிலும் தடம் பதித்துள்ளது.
உலக புகழ்பெற்ற பிஃபா உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் thala for a reason என்ற வசனத்துடன் ரொனால்டோவின் புகைப்படத்தை வைத்து பதிவிட்டுள்ளமையானது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது
மேலும், கமெண்டில் ரொனால்டோவில் உடை எண்ணும் 7, தோனியின் உடை எண்ணும் 7 எனவே இருவரும் எங்களுக்கு தலதான் என்று பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.