இரண்டே நாட்களில் 52 பேர் பலி: புதுடில்லியில் உச்சத்தை தொட்ட வெப்ப கதிர் அலைகள்..!!
[2024-06-21 11:01:32] Views:[196] புதுடில்லியில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக கடந்த இரண்டு நாட்களில் சுமார் 52 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
புதுடில்லியின் வைத்தியசாலை வட்டாரங்கள் குறித்த தகவலை உறுதி செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில், அதீத வெப்பம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் தலைநகரான புதுடில்லியில் வெப்பநிலை உச்சத்தை எட்டியுள்ளது.
இதன்படி, நாட்டின் வடபகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது.
இதனால் 40,000ற்கும் மேற்பட்டோருக்கு வெப்பக்காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.