yarlathirady.com

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை மகளிர் அணிக்கு இமாலய வெற்றி..!!

[2024-06-21 21:06:32] Views:[219]

மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கும் இலங்கை மகளிர் அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

அந்தவகையில், போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் அழைப்பின் பேரில் முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய இலங்கை வீராங்கனைகள் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 06 விக்கெட்டுகளை இழந்து 275 ஓட்டங்களை குவித்துள்ளனர்.

அதன்படி, பதிலுக்கு துடுப்பாட களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி 34.5 பந்துகளில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 115 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது

இதற்கமைய, மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 161 ஓட்டங்களால் இமாலய வெற்றியை பதிவு செய்து தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

மேலும், 16 வருடங்களுக்கு பின்னர் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான தொடர் ஒன்றை இலங்கை அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
குபேரா திரைப்பட திரைவிமர்சனம்...
2025-06-22 11:03:19
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள குபேரா திரைப்பட திரைவிமர்சனம்.
ஜாக்கி சானுடன் நடிக்கும் சிம்பு.! விரைவில் அறிவிப்பு:
2025-05-29 20:42:27
ஆக்ஷனில் பல சாதனைகளை படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.