தளபதி விஜய்யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு பட்டையை கிளப்பும் 'GOAT' படத்தின் 02 அப்டேட்கள்..!
[2024-06-22 11:02:58] Views:[232] தமிழ் சினிமாவின் அபிமான நட்சத்திரமான தளபதி விஜய் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடடுகிறார். இந்த மைல்கல்லைப் போற்றும் வகையில், அவரது வரவிருக்கும் படமான 'GOAT' படக்குழு சில பரபரப்பான அறிவிப்புகளை வரிசைப்படுத்தியுள்ளது.
முதலாவது அப்டேட்டாக இப்படத்தின் பட்டையை கிளப்பும் க்ளிம்ஸ் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இரண்டாவது அப்டேட்டாக விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியுடன் இணைந்து, 'சின்ன சின்ன கரங்கள்' என்ற தலைப்பில் இரண்டாவது சிங்கிள் இன்று மாலை 6 மணிக்கு இந்தப் பாடல் வெளியீடப்படும் என சமூக ஊடகங்களில் அறிவித்தானர்.
இரண்டாவது பாடலை தளபதி விஜய்யே பாடியுள்ளார். 'விசில் போடு' பாட்டின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாவது பாடலான 'சின்ன சின்ன கரங்கள்' எனும் பாடலையும் படியுள்ளார். செப்டம்பர் 05 ஆம் தேதி வெளியாகும் இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த இசை விருந்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.