அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு உள்நுழைந்த இந்திய அணி..!!
[2024-06-25 09:28:19] Views:[194] அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
இதற்கமைய, இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் நேற்றைய தினம் மோதின.
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களை பெற்றது.
இதனை தொடர்ந்து 206 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி சார்பில் டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர்.
இறுதியில் அவுஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் அவுஸ்திரேலியா அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.