சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: டேவிட் வார்னர்...!!
[2024-06-26 10:49:41] Views:[232] ரி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் இருந்து அவுஸ்திரேலியா வெளியேறியதை அடுத்து அந்த அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் டேவிட் வோர்னர் ஓய்வை அறிவித்துள்ளார்.
37 வயதான டேவிட் வார்னர் அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தமை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக அவுஸ்திரேலியா அணிக்காக டேவிட் வோர்னர் விளையாடி வருகிறார். 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,786 ஓட்டங்களை குவித்திருக்கிறார். இதேபோன்று 161 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 6932 ஓட்டங்களும், 110 டி20 போட்டிகளில் விளையாடி 3278 ஓட்டங்களை அவுஸ்திரேலியாவுக்காக அடித்திருக்கிறார்.
2015 உலகக்கோப்பை, 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை, 2021 ரி20 உலக கோப்பை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் என பல்வேறு சாதனைகளை அவுஸ்திரேலியா அணிக்காக டேவிட் வோர்னர் விளையாடி உள்ளார்.
அது மட்டும் இல்லாமல் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக எந்த ஒரு உள்ளூர் கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாமல் அவுஸ்திரேலியா அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை டேவிட் வோர்னர் படைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.