பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை...!
[2024-06-28 21:02:53] Views:[218] தென்னாப்பிரிக்காவில் உள்ள பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
பெருவின் தெற்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கமானது நள்ளிரவு 12:36 மணிக்கு ரிக்டர் அளவில் 7.2 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது .
அத்துடன் அட்டிகிபா மாகாணத்தில் இருந்து 8.8KM தொலைவில் இந்த நடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் உள்ள பகுதிகளில் வலுவான நடுக்கம் உணரப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், சேதம் குறித்து உடனடி தகவல் வெளியாக வில்லை .
குறித்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.