விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூவர் பலி...!!
[2024-06-28 21:29:52] Views:[360] டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் மேற்கூரையின் ஒரு பகுதி இன்று அதிகாலை இடிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்துள்ளதோடு 8 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனையடுத்து அனைத்து விமானப் புறப்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
டெல்லியில் இடைவிடாத மழை பெய்து வரும் நிலையில், இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெய்த கனமழை காரணமாக, டெல்லி விமான நிலையத்தின் பழைய புறப்பாடு முனையத்தில் உள்ள மேற்கூரையின் ஒரு பகுதி அதிகாலை 5 மணியளவில் இடிந்து விழுந்தது.
இந்நிலையில் அடுத்த இரண்டு மணிநேரங்களுக்கு வானிலை ஆய்வு மையம் தீவிரமான மழை தொடரக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடர் மழை காரணமாக குறித்த மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.