உலகக் கோப்பை யாருக்கு இன்று பலப்பரீட்சை...!!
[2024-06-29 14:59:09] Views:[222] 2024 T-20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று மோத உள்ளன.
குறித்த போட்டி பார்படோஸில் இலங்கை நேரப்படி இன்றிரவு 08:00 மணிக்கு பார்படோஸின் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வென்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது.
கடந்த 12 மாதங்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2023), 50 ஓவர் உலகக்கிண்ணத் தொடர் (2023), தற்போது T-20' உலகக்கிண்ணத் தொடர் என மூன்று 'உலக' இறுதிப்போட்டிகளில் அணியை வழிநடத்தும் முதல் இந்திய அணித்தலைவர் என்ற பெருமை பெறுகிறார் ரோகித் சர்மா.
தென் ஆப்ரிக்காவும் அசைக்க முடியாத அணியாக திகழ்கிறது. ICC, 'நாக்-அவுட்' போட்டிகளில் சொதப்புவதால், 'சோக்கர்ஸ்' என கேலி செய்தனர். இம்முறை அபாரமாக செயல்பட்டு, விமர்சனங்களை தகர்த்து இறுதிப் போட்டி வரை முன்னேறியுள்ளது.