விராட் கோலி, ரோகித் சர்மாவை தொடர்ந்து மற்றொரு வீரரும் ஓய்வு: சோகத்தில் ரசிகர்கள்..!
[2024-07-01 15:05:47] Views:[141] இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மாவை தொடர்ந்து சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜாவும் இருபதுக்கு 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே அவர் இதனை அறிவித்துள்ளார்.
டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன். நான் எப்போதும் என் நாட்டிற்காக என்னால் முடிந்ததைச் செய்து வருகிறேன், டி20 உலகக் கிண்ணத்தை வெல்லும் கனவு, நனவாகியுள்ளது.
இது எனது டி20 சர்வதேச வாழ்க்கையின் உச்சம். நினைவுகளுக்கும், வாழ்த்துகளுக்கும், அசைக்க முடியாத ஆதரவுக்கும் நன்றி என ரவீந்திர ஜடேஜா குறிப்பிட்டுள்ளார்.