தலைமை பதவிக்கான போட்டியில் தள்ளாடும் தமிழரசுக்கட்சியின் தலைவர்கள்?
[2024-07-02 21:04:59] Views:[191] இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் ஆர். சம்பந்தன் ஐயா அவர்களின் மறைவினைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக தலைமை பொறுப்பை கைப்பற்றுவது யார் என்பதற்கான போட்டி இப்பொழுதே ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகின்றது.
இப்படியொரு பின்னணியில் ஒரு பக்கம் தலைவரின் இறப்பிற்கு போலி கண்ணீர் வடித்துக் கொண்டு மறுபக்கம் திருகோணமலையில் இரகசிய கூட்டம் ஒன்று இடம்பெற்றதாகவும் அதில் அடுத்த தலைமை பதவிக்கான தெரிவு தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றதாகவும் நம்பதகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மேலும் அங்கு தீவிர கருத்து மோதல்கள் இடம்பெற்று ஒருவரை ஒருவர் மரியாதையற்ற தொனியில் வசைப்பாடியதாகவும் கூறப்படுகின்றது.
இறந்த வீட்டில் கூட அரசியல் வருமானம் தேடும் இந்த ஈனப்பிறவிகளை என்னவென்று சொல்வது? இதனை காணும் போது எமது தமிழ் அரசியல்வாதிகளை போன்று மோசமான நபர்களை இவ்வுலகம் இதற்கு முன் கண்டிருக்காது என்று கூற வேண்டும்.
எமது தாயக மக்களின் அடிப்படைத் தேவைகள், அபிவிருத்திகள் ,மீனவ பிரச்சினை, காணி பிரச்சினை , குடிநீர் பிரச்சினை, போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு என பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றப்போது இவையெதுவுமே அவர்களின் கண்களுக்கு புலப்படவோ காதுகளுக்கு எட்டப்பபடவோ இல்லை. ஆனால் தலைமை பதவிக்கான தேவை மட்டும் தற்போது அவர்களின் அத்தியாவசியமான தேவையாகவுள்ளது.
எப்போதாவது மக்களின் பிரச்சினைகளுக்கு இவ்வளவு விரைந்து தீர்வினைக் கண்டுள்ளார்களா? ஏன் தற்போது கச்சத்தீவு விவகாரம் தீவிரம் பெற்றுள்ள நிலையில் அதனை பற்றி எவரேனும் வாய்திறந்தார்களா ?
இந்த இறப்பினை வைத்து முடிந்தவரை அரசியல் இலாபம் தேடவே இப்போது முயற்சிக்கின்றார்கள் . எதிர்வரும் தேர்தல் காலங்களில் வாக்குகளை பெற இந்த இறப்பை இவர்கள் நிச்சயம் பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஐயா வழியில் செல்வோம் என ஆர்ப்பரித்துக் கொண்டு ஒரு கூட்டம் நிச்சயம் வரும். இதை வைத்து போலி அரசியல் நாடகங்கள் இனி நாளுக்கு நாள் அரங்கேறும்.
எதுவாயினும் இந்நயவஞ்சக அரசியல்வாதிகளினால் எமது தமிழினத்தின் இருப்பு கேள்விக்குறியாகும் என்பது மட்டும் உறுதி.